தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு உள்ளதாக இணையதளத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் 60-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விண்ணப்பித்தனர்.
வேலை வாங்கித் தருவதாகக் கூறியதை நம்பிச் சென்ற இந்தியர்கள், தாய்லாந்து அழைத்து செல்வதாக கூறி சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பு நிறுவனம் சட்ட விரோதமாக மியான்மருக்கு கடத்தி சென்று ஏமாற்றப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
பின்னர் அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தராமல் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளனர்.
இதையடுத்து, மியான்மர் நாட்டில் தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தினார்.
இந்நிலையில், மியான்மரில் சிக்கி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தப்பட்ட 13 தமிழர்கள் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தனர்.
அவர்களை சிறுபான்யினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.
இதனிடையே மீதமுள்ள தமிழர்களையும் மியான்மரில் இருந்து மீட்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.