முழுநேர அரசியலில் ஈடுபட முடிவெடுத்த பிரசாந்த் கிஷோர்!

– 3,500 கி.மீ. தொலைவுக்கு பாதயாத்திரை செல்ல திட்டம்

பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.

இதற்காக ‘ஜன் சுராஜ்’ என்ற பெயரில் பிரசார தளம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக பீகாரில் பாதயாத்திரை நடத்தப்போவதாக அவர் அறிவித்து இருந்தார்.

அதன்படி காந்தி பிறந்த தினத்தன்று, பீகாரின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பிதிகர்வரா காந்தி ஆசிரமத்தில் இருந்து தனது பாத யாத்திரையை தொடங்கினார்.

வழிநெடுகிலும் அவரை ஏராளமான பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர். மாநிலம் முழுவதும் 3,500 கி.மீ. தொலைவுக்கு தனது ஆதரவாளர்களுடன் பாதயாத்திரை மேற்கொள்ளும் பிரசாந்த் கிஷோர், ஒவ்வொரு பஞ்சாயத்துகளுக்கும் சென்று மக்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். 

இந்த யாத்திரை 12 முதல் 15 மாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பாதயாத்திரை குறித்து துனது டுவிட்டர் தளத்தில், ”மிகவும் பின்தங்கிய மற்றும் ஏழை மாநிலமான பீகாரின் அமைப்பு முறையை மாற்ற முடிவு செய்துள்ளேன்” என குறிப்பிட்டிருந்தார்.

Comments (0)
Add Comment