காலைப் பொழுதை காஃபியோடு தொடங்குவோம்!

அக்டோபர் – 01 ; சர்வதேச காபி தினம்;

காலை பொழுதுகள் என்றாலே பெரும்பாலும் காபியுடன் ஆரம்பமாகும். பெட் காபி தொடங்கி உணவுக்கு முன் உணவுக்கு பின், மதிய உணவு இடைவேளையில் என்று நாள் முழுக்க காபி பிரியர்கள் ரசித்து ருசித்து பருகும் காபி தினம் இன்று.

அதிகாரப்பூர்வமாக முதல் காபி தினம் அக்டோபர் 1- 2015ல் பன்னாட்டு காபி நிறுவனத்தால் மிலனில் தொடங்கப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் தேசிய காபி தினம் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்கள் ஒரு வேளையாவது காபி குடிப்பவர்களாக இருப்பார்கள். இந்த காபியில் பல விதமான ரகங்கள் இருக்கின்றன. அதிக விலை முதல் மிகக் குறைந்த விலைக்கு காபி கொட்டை மற்றும் பொடிகள் கிடைக்கின்றன.

காபி எப்படி வந்தது ?

காபி செடியில் இருந்து சிகப்பான பழங்களை தேர்வு செய்து எடுத்து அதன் கொட்டையை வறுத்து பொடியாக்கி நீருடன் கலந்து கொதிக்க வைத்து கருப்பு காபியாகவும் பாலுடன் கலந்து காபியும் தயாரிக்கப்படுகிறது.

இந்தக் காஃபிக்கு மிக நீண்ட  வரலாறும் உண்டு.

எத்தியோப்பியாவில் ஆடுகள் மேய்க்கும் சிறுவர்கள் தங்களது ஒரு சில ஆடுகள் ஒரு செடியின் கொண்டைகளை தின்று வருவதையும் அது மற்ற ஆடுகள் விடவும் உற்சாகமாக இருப்பதையும் கண்டனர்.

சிறுவர்களும் அந்த பழத்தைப் பறித்துக் கொட்டைகளை வறுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து பருகிய பின் தங்களுக்கும் உற்சாகம் கிடைத்ததை உணர்ந்தனர்.

அதன் பிறகு இந்த காபி எத்தியோப்பியாவில் பிரபலமானதாக கூறப்படுகிறது.

அதன்பின் துருக்கி, வட ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற உலக நாடுகள் முழுவதும் இந்த காபியானது பரவியது.

அதோடு, அமெரிக்கா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் உலக காபி கொட்டைகள் உற்பத்தியில் 35 சதவீத இங்கு விளைவிக்கப்படுகிறது.

நமக்கு தெரிந்த காபிகள் என்றால் பால் காபி, பிளாக் காபி, கருப்பட்டி காபி, சுக்கு மல்லி காபி, பில்டர் காபி தான். ஆனால் தற்போது பலவிதமான காபிகள் இருக்கின்றன. அதில் ஒரு சிலவற்றைப் பார்க்கலாம்.

டல்கோனா காபி, ஐஸ் கிரீம், வெயிட் லாஸ் காபி, கேப்பசினோ காபி, பிரின்ட் காபி, மூகை காபி, சாக்லேட் காபி, எதியோப்பியன் காபி, கோல்ட் காபி, தேங்காய் பால் காபி ….. அப்பாடா மூச்சு முட்டிரும்போலே. இன்னும் சொல்லப்படாத காபிகளும் ஏராளம் இருக்கின்றன.

காபியில் பலவிதம் இருக்கிறது அதுவும் உலகின் விலை உயர்ந்த வித்தியாசமான காபிகள் பற்றி பார்க்கலாமா…

விலை உயர்ந்த காபியின் பட்டியல்

ஓஸ்பினா காபி – இது உலகின் மிக விலை உயர்ந்த காபி களில் ஒன்றாக கூறப்படுகிறது. அதன் விலை ஒரு பவுண்டுக்கு $ 1540. அதாவது இந்திய மதிப்புக்கு லட்சக்கணக்கில் விற்கப்படுகிறதாம்.

பிளாக் ஐவரி காபிஇது ஒரு வித்தியாசமான காபியும்கூட. யானைகளுக்கு அரபிகா காபி பீன்ஸ் உணவாகக் கொடுக்கப்படுகிறது.

பிறகு அது செரித்து மலம் வழியாக வெளியானதும் அதை சேர்த்து சுத்தம் செய்து காயவைத்து வறுத்து காபி தயாரிக்கப்படுகிறது.

இதன் இந்திய ரூபாய் மதிப்பு 1,40,000 க்கும் மேல் இருக்கும் என்கின்றனர்.

ஃபின்கா எல் இன்ஜெர்டோ காபி –உலகின் விலையுயர்ந்த காபியில் மூன்றாவது இடத்தில் உள்ளது அதன் விலை ஒரு பவுண்டுக்கு $ 500 என கூறப்பட்டுள்ளது.

ஹசீண்டா எஸ்மரால்டா கீஷா காபி – உலகின் மிக விலை உயர்ந்த காபி வகைகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

கோபி லுவாக் – இதுவும் உலகின் மிக விலை உயர்ந்த மற்றும் பிரபலமான காபியாக கூறப்படுகிறது. இந்த காபி கொட்டைகள் புனுகுப்பூனை குடும்பத்தை சேர்ந்த ஆசிய மரநாய் கழிவில் இருந்து கிடைக்கின்றன.

காபி பழங்களை இந்த பூனைக்கு உணவாக கொடுத்து அந்த பூனை மலத்திலிருந்து எடுத்து பதப்படுத்தப்பட்டு பின்னர் தயாரிக்கப்படுகிறது.

அதன் விலை இந்திய மதிப்புப்படி ஒரு கப் காபி 1500 ரூபாய் எனக் கூறப்படுகிறது.

நாம் எடுத்துக் கொள்ளும் ஒரு ரூபாய் ப்ரூ காபி தொடங்கி எத்தனை விதமான காபிகள், உலகத்தின் விலையுயர்த காபிகள் என சர்வதேச காபி தினமான இன்று தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி தான்.

-யாழினி சோமு

Comments (0)
Add Comment