ரோஹித் சர்மாவின் கடல் பார்த்த வீடு!

பணம் என்பது சம்பாதிப்பதற்காக மட்டுமல்ல செலவழிப்பதற்கும்தான் என்ற கொள்கைப்படி வெகு சிலர்தான் வாழ்கிறார்கள். அப்படி வாழ்பவர்களில் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.

ஐ.பி.எல்.லில் மும்பை இந்தியன்ஸ் அணியால் 16 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ரோஹித் சர்மாவின் மொத்த சொத்து மதிப்பு 190 கோடி ரூபாய்.

பணத்தை கோடி கோடியாய் சம்பாதிக்கும் ரோஹித் சர்மா, அதைச் செலவு செய்வதற்கும் கணக்கு பார்ப்பதில்லை.

தனக்குப் பிடித்த விஷயங்களை எந்த விலை கொடுத்தாவது வாங்கிவிடுவார்.

அப்படி அவர் வாங்கி வைத்துள்ள சில காஸ்ட்லி விஷயங்கள்…

30 கோடி ரூபாய் வீடு:

ரோஹித் சர்மாவுக்கு சொந்தமான வீடு, மும்பையில் பணக்காரர்கள் வசிக்கும் பகுதியான ஒர்லியில் அமைந்துள்ளது. கடற்கரை ஓரப் பகுதியில் அமைந்துள்ள அகுஜா டவர்ஸ் கட்டிடத்தின் 29-வது மாடியில் இந்த அபார்ட்மெண்ட் உள்ளது.

4 படுக்கை அறைகளைக் கொண்ட இந்த அபார்ட்மெண்டில் இருந்து 270 டிகிரி வியூவில் அரேபியக் கடலைப் பார்க்க முடியும். இந்த அபார்ட்மெண்டின் விலை 30 கோடி ரூபாய்.

கைக்கடிகாரம்:

ரோஹித் சர்மாவுக்கு கைக்கடிகாரங்கள் மீது ஆசை அதிகம். தான் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கு வித்தியாசமான கைக்கடிகாரங்கள் இருக்கிறதா என்றுதான் அவரது கண்கள் முதலில் தேடும்.

அந்த வகையில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட கைக் கடிகாரங்களை அவர் வாங்கி வைத்துள்ளார்.

அவர் வைத்துள்ள கைக்கடிகாரங்களில் காஸ்ட்லியான கைக் கடிகடிகாரம் ‘ஹுபோல்ட் ஃபெராரி யுனிகோ மேஜிக் கோல்ட்’.

இந்த கைக்கடிகாரத்தின் விலை 27.8 லட்சம் கோடி ரூபாய். 2018-ம் ஆண்டில் தனது பிறந்த நாளன்று இந்த கைக்கடிகாரத்தை ஆசையாக வாங்கியுள்ளார் ரோஹித் சர்மா.

இதைத்தவிர 5 லட்சம் ரூபாய்க்கு மேல் விலைமதிப்புள்ள பல கைக் கடிகாரங்களையும் அவர் வைத்துள்ளார்.

கார்கள்:

கிரிக்கெட் வீரர்களுக்கு பொதுவாகவே கார்கள் மீது ஆசை அதிகம். இந்த கார் ஆசைக்கு ரோஹித் சர்மாவும் விதிவிலக்கல்ல.

Maruti Vitara Brezza, Skoda Laura, BMW 350I , Mercedes GLS 350d, BMW M5 என பல்வேறு கார்களை தனது வீட்டில் வைத்துள்ளார் ரோஹித் சர்மா. இதில் BMW M5 வகை காரின் விலைதான் கொஞ்சம் அதிகம். 1.33 கோடி ரூபாய்.

விடுமுறைக்கால வீடு:

மும்பை புறநகர் பகுதி்யான காந்த்லாவில் சுனில் ஷெட்டி அமைத்துள்ள வில்லாக்களில் ஒன்றை 5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார் ரோஹித் சர்மா.

வில்லாவின் விலை 5 கோடி ரூபாயாக இருந்தாலும், மேற்கொண்டு 5 கோடி ரூபாயைச் செலவுசெய்து அந்த வில்லாவை மேலும் மெருகூட்டியுள்ளார் ரோஹித்.

மொத்தத்தில் விடுமுறை நாட்களில் தங்குவதற்காக மட்டும் ரோஹித் சர்மா வைத்துள்ள வில்லாவின் மதிப்பு 10 கோடி ரூபாய்.

-சுதிர் P.M.

நன்றி: வாவ் தமிழா இணையதளம்

Comments (0)
Add Comment