பகத்சிங் பிறந்த தினம்!

1907-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி பஞ்சாப் மாநிலம் லாயல்பூரில், சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.

இளம் வயதிலேயே ஐரோப்பியப் புரட்சி இயக்கங்களைப் படித்து பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார்.

* 1919-ல், தன்னுடைய பன்னிரண்டாவது வயதில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடத்தில் இந்திய மக்களின் ரத்தம் தோய்ந்த ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து, கண்ணாடி பாட்டிலில் போட்டு, ’இந்திய விடுதலையே எம் லட்சியம்’ என அம்மண்ணின் மீது சத்தியம் செய்கிறார்.

* காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட பகத்சிங்,
அகிம்சை வழியில் போராடினால் சுதந்திரம் கிடைக்காது என்று எண்ணி.

தோழர்களுடன் இணைந்து ‘இந்தியக் குடியரசு சங்கம்’ (Hindustan Republic Association) எனும் அமைப்பில் ஒருவராக இணைகிறார்.

பின்னர், `நவஜவான் பாரத் சபை’ என்ற இளைஞர்கள் அமைப்பை உருவாக்கினார்.

* ‘நமது இறுதி லட்சியம் சோசலிசம்’ என்பதை வலியுறுத்திய பகத்சிங், 1928 செப்டம்பர் 8, 9-ம் தேதிகளில் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் கூடி ‘இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம்’ (எச்.ஆர்.எஸ்.ஏ) என்று அந்த அமைப்பின் பெயரை மாற்றினார்.

* ஆங்கிலேயர் சைமன் கமிஷனில் சட்டவரையறை கொண்டுவரப்பட்டபோது, அதை எதிர்த்து காங்கிரஸ் தலைவர்கள் நாடு முழுவதும் போராடினர்.

இதில் நடந்த தடியடி சம்பவத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் லாலா லஜபதிராய் உயிரிழந்தார்.

* கோபமடைந்த பகத்சிங் மற்றும் அவரது நண்பர்கள் சாண்டோஸ் என்னும் ஆங்கிலேயரைச் சுட்டுக்கொன்று தலைமறைவாயினர்.

சாண்டோஸைக் கொன்றதற்கும், குண்டுவீச்சில் ஈடுபட்டதற்கும் 1931-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி தூக்கிலிடப்பட்டார் பகத்சிங்.

Comments (0)
Add Comment