பெண்களை ‘பொருட்களாக’ நடத்தும் பா.ஜ.க!

ராகுல் குற்றச்சாட்டு 

உத்தரகண்ட் மாநிலத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் வினோத் ஆர்யா என்பவருடைய மகன் புல்கிட் ஆர்யாவுக்கு சொந்தமாக ரிஷிகேஷ் அருகே சொகுசு விடுதி உள்ளது.

அங்கு வரவேற்பாளராக பணியாற்றி வந்த அங்கிதா பண்டாரி, விடுதிக்கு பின்னால் உள்ள கால்வாயில் இருந்து சடலமாக கடந்த செப்டம்பர் 24-ம் தேதி மீட்கப்பட்டார்.

19 வயதே ஆன அங்கிதா மரணம் குறித்து அவரின் தந்தை, புல்கிட் ஆர்யா மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் புல்கிட் ஆர்யா கைது செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தையான பா.ஜ.க.வின் வினோத் ஆர்யா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவின் பெண்கள் நமது மிகப்பெரிய பலம். ஆனால், பா.ஜ.க.வினரால் அவர்கள் ‘பொருட்களாக’ நடத்தப்படுகின்றனர்.

இதற்கு உத்தரகண்டில் நடந்த அங்கிதா கொலையே மிகவும் கேவலமான உதாரணம். பா.ஜ.க.வின் முதல்வர் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க அனைத்து ஆதாரங்களையும் அழிக்கும் பணியை செய்தார்.

பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த பா.ஜ.க. வை அனுமதிக்க மாட்டோம்” எனக் கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment