அயோத்தியில் வெளியாகும் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ டீசர்!

‘பாகுபலி’ படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ், கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் அயோத்தியில் வெளியிடப்படவுள்ளது.

பாலிவுட்டில் வெளியான ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’ என்ற படத்தை இயக்கி, தேசிய விருதை வென்ற இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆதி புருஷ்’.

பிரபாஸ் நாயகனாக நடிக்க, ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் சயீஃப் அலிகான் மற்றும் சன்னி சிங் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

‘ஆதி புருஷ்’ படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்களிடத்தில் படத்தை பற்றிய ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

இந்த நிலையில், அக்டோபர் 2 ஆம் தேதி அன்று புனித பூமியான அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்பட இருக்கிறது.

மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ள நிகழ்வில் படத்தின் இயக்குநர் ஓம் ராவத், தயாரிப்பாளர் பூஷன் குமார், பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

தீமைக்கும், நன்மைக்கும் இடையேயான போட்டி குறித்து, ராமாயணத்தை மையப்படுத்தி தயாரான இந்த திரைப்படம், உத்திரப்பிரதேசத்தில் உள்ள இந்து மதம் சார்ந்த புனித நகரமாக கருதப்படும் ராமர் பிறந்த பூமியில், ஆதி புருஷ் படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு நடைபெறுவது பொருத்தமானதாக அமைந்திருக்கிறது.

Comments (0)
Add Comment