ரிஸ்க் எடுக்காமல் இருப்பதே ரிஸ்க்!

– மார்க் சூக்கர்பர்க்கின் நம்பிக்கை மொழிகள்

உலக மக்களால் பரபரப்பாக பின்பற்றப்படும் சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனர்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் வொயிட் பிளைன்ஸ் நகரில் பிறந்தவர்.
உலக பணக்காரர்களில் ஒருவரான மார்க் சூக்கர்பர்க்கின் நம்பிக்கை மொழிகள்…

ஒவ்வொரு நாளும் எனக்கு நானே ஒரு கேள்வியை கேட்டுக் கொள்வேன்:

நான் செய்யவேண்டிய முக்கியமான வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேனா?

வேகமாக நகருங்கள். புதுமை படையுங்கள். நீங்கள் புதுமையைச் செய்யவில்லை என்றால், வேகமாக செயல்படமாட்டீர்கள்.

வாழ்க்கையில் மிகப்பெரிய ரிஸ்க் என்பது ரிஸ்க் எடுக்காமல் இருப்பதே.
தொழிலில் மிக எளிமையான விதிமுறை இதுதான் என்று நினைக்கிறேன். ஒரு காரியத்தை உங்களால் எளிதாக செய்ய முடிந்தால், நீங்கள் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெறுவீர்கள்.

உங்களுக்குப் பேரார்வமிக்க துறையை நீங்கள் கண்டறிந்து கொள்ளுங்கள்.
நிறைய தொழில்கள் ஏதாவது தவறு நடந்துவிடுமோ என்று கவலையில் இருக்கின்றன. அவர்கள் ரிஸ்க் எடுக்க பயப்படுகிறார்கள்.

என்ன சொல்கிறீர்கள் என்பதைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை. நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதில்தான் கவனம் வைத்திருப்பார்கள்.

பணம் சம்பாதிப்பதற்காக சேவைகளை கட்டமைக்காதீர்கள். நல்ல சேவையை வழங்குவதற்காக பணத்தை ஈட்டுங்கள்.

விரைவாகவே இந்த உலகில் மாற்றங்கள் நிகழ்ந்துவிடும். ரிஸ்க் எதுவும் எடுக்காதபோது தோல்வி உறுதியாகிறது.

ஒரு விஷயத்தை நான் இங்கே நீண்டகால நோக்கில் உருவாக்கி வருகிறேன். வேறு ஏதாவதுதான் திசைதிருப்புவதாக இருக்கும்.

ஒரு நிறுவனம் என்றால், அதில் இரண்டு விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். என்ன செய்யப்போகிறீர்கள் என்ற சரியான நோக்கம், அதனை செயல்படுத்த

சிறந்த பணியாளர்கள். பின்னர் அழகாக செய்துமுடிப்பீர்கள்.
புதுமை என்பது மிகச்சிறந்த ஐடியா என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அதில் அதிகமானது வேகமாக செயல்படுவதும், முயற்சிப்பதும்தான்.

ஓர் இலக்கை நிர்ணயிப்பதும் ஒரு தொழிலைக் கட்டமைப்பதும் ஒன்றோடு ஒன்று கலந்திருக்கிறது.

அது செயல்படவில்லை என்றாலும் ஏதாவது ஒன்றை முயற்சி செய்யுங்கள். எதையும் செய்யாமலே அதிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

கோடிக்கணக்கான மக்கள் தொடர்புகொள்வதற்கு உதவியாக இருப்பது அற்புதமானது. என் வாழ்க்கையில் மிகப் பெருமையானதாக அதை நினைக்கிறேன்.

உண்மையில் பேஸ்புக் ஒரு நிறுவனமாக உருவாக்கப்படவில்லை.
ஒரு சமூகநோக்கத்துடன் மேலும் வெளிப்படையாக மற்றும் தொடர்பு கொள்ளும் வகையில் உலகை உருவாக்குவது.

என்னுடைய குறிக்கோள் ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது அல்ல. வருமானம் அல்லது லாபத்தைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை என்று பலபேர் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் அதுவொரு சாதரணமான கம்பெனியாக இருக்கக்கூடாது. உண்மையில் மிகப்பெரிய மாற்றத்தை உலகில் ஏற்படுத்த வேண்டும்.

மக்களுக்கு வலிமையைக் கொடுக்கும்போது, இந்த உலகம் மேலும் வெளிப்படையாக மாறும்.

என்னுடைய நண்பர்கள் அனைவரும் சிறுவர்களாக, இளைஞர்களாக இருந்தார்கள். அவர்களுக்குச் சொன்ன ஒரே அறிவுரை இதுதான்: புரோகிராம் செய்வது எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள்.

தொடர்பு என்பது மனித உரிமை. இன்னும் உலகை நான் வெளிப்படையாக மாற்ற விரும்புகிறேன்.

மேலும் எண்ணற்ற மக்களுக்கு சேவை செய்யவே நிறுவனத்தை நடத்தி வருகிறோம்.

ஆப்பிள், கூகுள், அமேசான், சாம்சங் மற்றும் மைக்ரோசாப்ட் கம்பெனிகளைவிட பேஸ்புக் மிக வித்தியாசமான இடத்தில் இருக்கிறது. நாங்கள் ஒரு சமூகத்தை உருவாக்கி வருகிறோம்.

மக்களைப் பற்றி முதலில் கவலைப்படுவதுதான் எங்கள் தத்துவம்.

Comments (0)
Add Comment