தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே போதைப் பொருட்கள் பயன்பாடு என்பது அண்மைக் காலத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
சென்ற அதிமுக ஆட்சியில் குட்கா வினியோகம் அதிக அளவில் நடந்து அதற்கு சம்பந்தமான ஒரு வழக்கும் பதிவு பண்ணப்பட்டு அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகள் உட்பட பலர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.
ஆனால், திமுக ஆட்சி வந்தபிறகு அதே விதமான குட்கா புழக்கமும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கமும் தொடர்ந்து இருந்தபடியே இருக்கிறது. நிறைய பேருக்குச் சொந்தமான இடங்களில் குட்கா பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன. நிறைய பகுதிகளில் கஞ்சா கைப்பற்றப்படுகிறது. அது தொடர்பான வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
தி.மு.க, அ.தி.மு.க என எந்தக் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இந்த போதை பொருட்கள் விநியோகம் தொடர்ந்து நடந்துக்கொண்டிருக்கின்றன என்பது தான் இன்றுள்ள எதார்த்தமாக இருக்கிறது.
அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு வடமாநிலத்தில் உள்ள ஒரு தனியார் துறைமுகத்தில் அதிக அளவிலான போதைப் பொருட்கள் வந்து இறங்கியதை கண்டுபிடிக்கப்பட்டு, அது பெரிய சர்ச்சைக்குரிய விஷயம் ஆனது. அது தொடர்பான வழக்குகளில் யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிக்கிறது என்கிற விவரங்கள் இதுவரைக்கும் கிடைக்கவில்லை.
ஆனால், இந்தியா முழுவதும் குறிப்பாக கல்லூரி மாணவர்களை குறிவைத்தே இந்த போதைப்பொருட்கள் புழுக்கமும் இருந்திருக்கிறது. அதிகபட்ச கட்டுப்பாடுகள் சொல்லப்படக்கூடிய சிறையில் கூட கஞ்சா போன்ற போதைப் பொருட்களில் புழப்பம் இருப்பதை வெவ்வேறு ஊடகs செய்திகளில் வெளிப்படுத்துகின்றன.
இந்த நிலையில் மும்பை துறைமுகத்தில் நேற்றைய தினம் வந்திறங்கிய 1725 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இவை வெளிநாட்டிலிருந்து கடத்திவரப்படுகின்றது.
அத்ததைய கூடுதலான மதிப்புள்ள இந்த போதைப் பொருட்களை கடத்தி வந்தது யார் என்பதை குறித்த தீவிர விசாரணை ஒருபுறம் இருந்தாலும் இந்தியாவில் குறிப்பிட்டு சமீபத்தில் பத்தாண்டுகளில் ஏன் இந்த போதைப்பொருட்களின் புழப்பங்கள் அதிகரித்துக்கின்றது என்பதை அரசியலை தாண்டிய ஒரு கேள்வியாக முன்வைக்கப்படுகிறது.
மாநில அரசும் சரி, மத்திய அரசும் சரி இதற்கு எதிரான நடவடிக்கைகளை ஏன் கடுமையாகப்படவில்லை.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டும்கூட, ஏன் இந்தளவுக்கு போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது?
போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு ஏன் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறது? என்பதெல்லாம் மாநில அரசும் மைய அரசும் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியாக இருக்கிறது.
ஏற்கனவே தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை மற்ற மாநிலங்களை விட கூடுதலாக இருக்கிறது. இப்போது போதைப்பொருட்களின் புழக்கமும் அந்த அளவுக்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கும் விதமாக உள்ளது.
இளைஞர்களை குறிவைத்து அவர்களை இலக்காக வைத்து வினியோகமாகும் இந்த போதைப் பொருட்கள் ஒரு தலைமுறையே எந்த அளவுக்கு மயக்கத்திற்கு ஆட்படுத்தப்படுகிறது என்பதை விட அதைப்பற்றி கவலை அளிக்கிறது இந்த விஷயங்கள் எல்லாம்.
சமீபத்தில் மும்பை துறைமுகத்தில் ரூ.1725 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதற்கு யார் பொறுப்பேற்பார் என்ற இந்தக் கேள்வி மக்கள் முன்பாக வைக்கப்பட்டுள்ளது.