;
– மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம்
டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி மும்பையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியாததால்தான் உயிரிழக்க நேரிட்டது என தெரியவந்தது.
காரின் பின் சீட்டில் அமர்ந்து பிரயாணிப்பவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் இனி அபராதம் விதிக்கப்படும் என ஒன்றிய போக்குவரத்துத் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கார்களின் அனைத்து சீட்களிலும் எச்சரிக்கை ஒலி பொருத்துவது கட்டாயமாக்கி உள்ளது.
இது தொடர்பான வரைவு விதிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதில், “காரின் முன் சீட் மற்றும் பின் சீட்களில் இருப்பவர்கள் சீட் பெல்ட் (சேப்டி பெல்ட்) அணியாவிட்டால், ஆடியோ மற்றும் வீடியோ மூலம் எச்சரிக்கை அறிவிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.