நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் அரசு!

அமைச்சர்கள் தலைமையில் குழு அமைப்பு

தமிழகத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு 3 அமைச்சர்கள் தலைமையில், 600 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இது குறித்து விளக்கமளித்த அவர், “பருவ காலம் மாற்றம் என்பதால், காய்ச்சல் அதிகரித்து வருகிறது. மூன்றுக்கு மேற்பட்ட பாதிப்புகள் கண்டறியப்படும் பகுதிகளில், இன்று முதல் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும்.

‘எச்1 என்1’ வைரசால் 353 பேர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த காய்ச்சல் மூன்று நாட்களில் சரியாகி விடும்.

செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு பகுதியில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணியின் குழந்தை இறந்து பிறந்தது.

நிறைமாத கர்ப்பிணியான அவரின் குழந்தை வயிற்றில் தலைகீழாக இருந்ததால், ‘ஸ்கேன்’ எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அவர் ஸ்கேன் எடுத்துவிட்டு, தன் உறவினர் இறந்து விட்டதால், இறுதி சடங்கில் பங்கேற்று, இரண்டு நாட்களுக்கு பின் வந்துள்ளார்.

இதில், தாயின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. பணியில் இல்லாத டாக்டர், வீடியோ பார்த்து பிரசவம் பார்த்த செவிலியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், மக்கள் நல்வாழ்வுத் துறை, நகராட்சி நிர்வாக துறை, ஊரக உள்ளாட்சித் துறை ஆகிய மூன்று அமைச்சர்களின் தலைமையில், 600 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.

Comments (0)
Add Comment