தலைப்பிலேயே கெத்து காட்டிய அஜித்தின் ‘துணிவு’!

தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். கடைசியாக இவரது நடிப்பில் வலிமை படம் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் மீண்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அந்தப் படத்திற்கு தலைப்பு ஏதும் வைக்காத காரணத்தால் ‘ஏகே61’ என அறியப்பட்டது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இது. இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தின் அப்டேட் குறித்த எதிர்பார்ப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்த நிலையில், இப்போது அந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

துணிவே துணை என வீரம் படத்தில் அஜித்தின் வாகனத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதை நினைவுப்படுத்தும் வகையில் இந்த தலைப்பு அமைந்துள்ளது.

படக்குழு வெளியிட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தில் துப்பாக்கி வைத்துக் கொண்டு கூலாக தாடி மற்றும் மீசையுடன் காட்சி அளிக்கிறார் அஜித்.

பின்னணியில் ரூபாய் நோட்டுகளில் இருப்பது போன்ற லே-அவுட்டில் படத்தின் தலைப்பு ‘துணிவு’ என இடம்பெற்றுள்ளது.

அதன் கீழ் ‘No Guts No Glory’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அதை வைத்து பார்க்கும் போது படத்தின் கதை வங்கியை மையமாக கொண்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)
Add Comment