ஆஸ்கர் விருதுப் பட்டியலில் குஜராத்தி படம்!

95-வது ஆஸ்கர் விருது, லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் அடுத்த ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில் சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற பிரிவில் குஜராத்தி இயக்குநர் பான் நிலன் இயக்கத்தில் உருவான ‘ஷெல்லோ ஷோ திரைப்படம் இந்தியாவின் சார்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் சிறிய கிராமத்தில் இருக்கும் சிறுவனுக்கு திரைப்படம் மீதான காதல் பற்றி படமாக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் பவின் ரபாரி, பவேஷ் ஸ்ரீமலி, ரிச்சா மீனா, திபன் ராவல், பரேஷ் மேக்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

2021-ல் டிரிபிகா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்தப் படம், 2021-ல் வல்லடோலிட் சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் ஸ்பைக் விருதையும் பெற்றது.  

கடந்தாண்டு கூழாங்கல் எனும் தமிழ் திரைப்படம் இந்தியாவின் சார்பாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment