தமிழ் சினிமா உலகில் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழந்தவர் நடிகர் ராமராஜன்.
ரஜினி, கமல் என்று ஸ்டைலான நடிகர்கள் இருந்த நிலையில் வெறும் அரை ட்ரவுசர் மட்டுமே போட்டு வந்து தன் படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓட வைத்தவர்.
இந்த பெருமையெல்லாம் ராமராஜனை மட்டுமே சேரும்.
1986-ம் ஆண்டு ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானவர் ராமராஜன். கிராமிய கதைகளாக நடித்து வந்த ராமராஜனுக்கு கங்கை அமரன் இயக்கத்தில் நடித்த ‘கரகாட்டக்காரன்’ மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.
அந்தப்படம் வருடக் கணக்கில் தியேட்டர்களில் ஓடியது. தொடர்ந்து அவரின் பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடின.
அதோடு எம்ஜிஆர் பாணியில் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று தொடர்ந்து உறுதியாக இருந்து வந்ததால் ஹீரோ மார்க்கெட் டல் அடித்த பிறகு தேடிச் சென்ற கேரக்டர் வேடங்களில் நடிக்க மறுத்தார் ராமராஜன்.
இந்த நிலையில் 2001-ம் ஆண்டு ஆண்டுக்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி இருந்த ராமராஜன், அரசியலில் சிலகாலம் பயணித்தார்.
2012-ம் ஆண்டில் ‘மேதை’ என்ற படத்தில் நடித்தவர் தற்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ‘சாமானியன்’ என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.
ரமேஷ் என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடிக்கின்றனர். அதுவும் இப்படம் 5 மொழிகளில் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.