மியான்மரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்!

துரை.ரவிக்குமார் எம்.பி கோரிக்கை

மியான்மரில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்க ஒன்றிய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் துரை.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மியான்மரில் சிக்கி உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் தமிழர்கள் பற்றிய செய்தி அதிர்ச்சி அளிக்கக் கூடியது. அவர்கள் அனைவரையும் மீட்க போர்க்கால அடிப்படையில் ஒன்றிய அரசு நவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு அதற்கான முயற்சிகளை துரிதமாக வேண்டும்.

இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தையும் தொடர்பு கொண்டு பேசியுள்ளோம். கடந்த 2014 முதல் 18 வரையிலான காலகட்டத்தில் மட்டும் தமிழகத்திலிருந்து 2 லட்சம் பேர் மேற்காசிய நாடுகளுக்கு  வேலைக்குச் சென்றுள்ளதை ஒரு புள்ளி விவரம் கூறியுள்ளது.

இதுபோல் வெளிநாட்டு  வேலைக்குச் செல்பவர்களுக்கு அந்த நாடுகள் உரிய பாதுகாப்பு அளிப்பதில்லை. 

இதுபோன்ற சூழலில் அங்கு சிக்கித் தவித்துள்ள தமிழர்களை மீட்க ஒன்றிய அரசு தீவிரமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment