எம்.ஆர்.ராதா

பரண்:

தமிழ் சினிமாவில் பலருக்கு முதலமைச்சர் கனவு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் போது ‘நடிக வேள்’ என்றழைக்கப்பட்ட எம்.ஆர்.ராதாவிடம் 1961 ஜனவரியில் ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் கேட்கப் பட்ட கேள்விகளும். பதில்களும்.

கே: பெரியார், ராஜாஜி, அண்ணாதுரை – இவர்களில் பொதுப்படையான பொருளை கருத்தாழத்தோடு பேசக்கூடியவர்களை வரிசைப்படுத்தவும்.

ராதா: பெரியார் தான்.
வரிசை தேவையில்லை.

கே: பெரியாரின் நட்பு முதன்முதலில் தங்களுக்கு எப்படிக் கிடைத்தது?

ராதா: அவரையே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்

கே: தமிழ்நாடு தனியாக இயங்க விரும்புகிறீர்களா? இந்தியாவில் ஒட்டிக் கொள்ள எண்ணமா?

ராதா : அதெற்கெல்லாம் பெரிய தலைவர்கள் இருக்கிறார்கள். தங்களுக்கும் தேவையில்லை. எனக்கும் தேவையில்லை.

கே: அண்ணே! உங்களை எல்லோரும் கஞ்சன்னு சொல்றாங்களே. உண்மையா?

ராதா : திருடன், முடிச்சவிக்கி, அயோக்கியன் போன்றவர்களுக்கு நான் கஞ்சன்.

கே: நீங்கள் பெரியாரையும் புகழ்கிறீர்கள். காமராஜரையும் புகழ்கிறீர்கள். நீங்கள் எந்தக் கட்சி?

ராதா: இருவரையும் புகழும் கட்சி

கே: ‘நடிகவேள்’ என்ற பட்டம் தங்களுக்கு யாரால் எங்கு கொடுக்கப்பட்டது?

ராதா: பட்டுக்கோட்டை அழகிரிசாமியால், மதுரையில்

கே: அண்ணாதுரை, சம்பத் இவர்களைப் பற்றி தங்கள் கருத்து?

ராதா: இருவருமே நல்லவர்கள்.

கே: தாங்கள் இந்த நாட்டின் முதல் மந்திரி ஆனால்?

ராதா: இது மாதிரிக் கேள்வி கேட்பவர்களைத் தூக்கில் போடச் சட்டம் கொண்டுவருவேன்.

நன்றி: தஞ்சை ச.சோமசுந்தரம் எழுதிய ‘பெரியாரின் போர் வாள் எம்.ஆர்.ராதா என்கிற நூல்

Comments (0)
Add Comment