7-வது டி 20 ஓவர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை அக்டோபர் 23-ம் தேதி எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஆசியக் கோப்பைத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார்.
இதேபோல் ஹர்ஷல் படேல் அணியில் இடம் பிடித்துள்ளார். தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோர் வைக்கப்பட்டுள்ளனர்.
20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ரோகித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணைக் கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.