– தமிழக அரசுக்கு கெடு விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புக்களை அகற்ற வலியுறுத்தி கஸ்தூரிபாய் – இந்திரா நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், “கால்வாயில் அமைந்துள்ள உயர்மட்ட ரயில் தண்டவாளங்களுக்கான தூண்கள், பாலங்களின் தூண்கள் தவிர, மற்ற அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் ஓராண்டில் அகற்ற வேண்டும். மேற்கொண்டு எந்த கால அவகாசமும் வழங்கப்படமாட்டாது” என தமிழக அரசுக்கு கெடு விதித்து உத்தரவிட்டது.