– சர்வதேச ஆய்வில் தகவல்
மனித வளர்ச்சிக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டே ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அறிய முடியும்.
அப்படி கிட்டதட்ட 191 நாடுகளின் மனித வளர்ச்சி குறியீடு குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தியாவின் மனித வளர்ச்சிக் குறியீடு 130-வது இடத்தில் உள்ளது.
மனித வளர்ச்சிக் குறியீட்டில் முதல் மூன்று இடங்களில் சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. நடுத்தர மனித வளர்ச்சி அடைந்த 43 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வின்படி இந்தியாவின் மனித வளர்ச்சிக் குறியீட்டில் 189 நாடுகளில் 131-வது இடத்தைப் பிடித்தது.
அதாவது இந்தியாவின் மனித வளர்ச்சிக் குறியீடு 2020-ல் 0.62 ஆக இருந்தது. அதே 2021-ல் 0.633 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 1990ம் ஆண்டு முதல் 129-வது இடத்தில் இருந்த இந்தியா, ஒவ்வொரு ஆண்டும் கீழே இறங்கி வருகிறது. ஆனால் இந்தியர்களின் ஆயுட்காலம் 69.7ல் இருந்து 67.2 ஆக குறைந்துள்ளது.
இந்தப் பட்டியலில், இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை 73-வது இடத்திலும், சீனா 79-வது இடத்திலும், பாகிஸ்தான் 161-வது இடத்திலும், வங்கதேசம் 129-வது இடத்திலும், பூடான் 127-வது இடத்திலும், நேபாளம் 143-வது இடத்திலும், மியான்மர் – 149வது இடத்திலும் உள்ளன.