உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன ஏவுகணை சோதனை வெற்றி!

– பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தகவல்

ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ள நவீன ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ராணுவ மையத்தில் நேற்று நடந்தது.

தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கக்கூடிய இந்த ஏவுகணை மிகவும் சிறப்பானது. எதிரிகள் வானில் இருந்து செலுத்தும் ஏவுகணைகளை அடையாளம் கண்டு, உடனடியாக செயல்பட்டு வானிலேயே அதை தாக்கி அழிக்கும் திறன் உடையது.

தரையில் பயணம் செய்யும்போதும், வாகனத்திலிருந்து இந்த ஏவுகணையை ஏவ முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

இந்த நிலையில், இந்த ஏவுகணையில் மொத்தம் 6 வகையான சோதனைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டதாகவும் இவை அனைத்தும் துல்லியமாக, வெற்றிகரமாக நடந்ததாகவும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ கூறியுள்ளது.

இந்த முயற்சிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment