சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு புராணப் பாத்திரங்களில் நடிப்பதைப் பெரும்பாலும் தவிர்த்து வந்த எம்.ஜி.ஆர், சில படங்களில் கடவுள் வேடம் ஏற்றிருக்கிறார். இதில் முருகனாக நடித்த படம் ‘தனிப்பிறவி’.
சின்னப்பத் தேவர் தயாரித்த இந்தப் படம் வெளிவந்த ஆண்டு 1966.
இதில் ஒரு காட்சியில் முருகனாக எம்.ஜி.ஆர் நடித்ததும், வேடப் பொருத்ததைப் பார்த்துப் பூரித்துப் போன தீவிரமான முருக பக்தரும், தயாரிப்பாளருமான தேவர், முருகன் வேடத்தில் இருந்த எம்.ஜி.ஆருடன் புகைப்படம் எடுத்திருக்கிறார்.