உடல் எடையைக் குறைக்க என்ன செய்யலாம்?

‘உணவே மருந்து’ என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது பல்வேறு வகையான நோய்களுக்கு அடித்தளமாக அமைகிறது என்பது கவலைக்குரிய ஒன்று.

உடல் எடை அதிகரிப்பதால் மன அழுத்தம், இருதய நோய், சர்க்கரை நோய் உருவாகிறது. மேலும், அதிக எடை காரணமாக தினசரி வாழ்க்கையில் சிரமங்கள் ஏற்படுகிறது. பெண்களுக்கு பிசிஓடி யின் அறிகுறியாகவும் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நம் தினசரி வாழ்க்கையில் உணவு முறை மற்றும் உடற்பயிற்சி மூலம் செய்யும் சில மாற்றங்களால் நம்மை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள முடியும்.

உணவின் அளவில் 60க்கும் 40 என்ற விதத்தில் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் அதாவது 60% சாதம் 40% காய்கறிகள் எடுத்துக் கொள்வது, தினசரி ஏதேனும் ஒரு பழச்சாறு பருகுவது, மாலையில் நடை பயிற்சி மேற்கொள்வது போன்றவை உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

யோகா செய்வதன் மூலம் உடல் மற்றும் மனதை சமநிலையில் வைத்துக் கொள்ளலாம் மன அழுத்தம், பதட்டம் போன்றவை வராமல் தவிர்க்கலாம். சூரிய நமஸ்காரம் செய்வது நல்ல பலன்களைத் தரும். மேலும் உளவியல் வழிகளின் மூலமாகவும் உடல் எடையை குறைக்கலாம்.

அளவாக சாப்பிடுவது, ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது, 8 மணி நேர தூக்கம் மற்றும் சாப்பிடும் தட்டை சிறிய அளவில் பயன்படுத்துவது (இவ்வாறு செய்வதன் மூலம் அந்த சிறிய தட்டில் உணவு நிறைய இருப்பது போல் தெரியும். இதன் மூலம் சாப்பிடும் அளவை குறைக்க முடியும்)

சாப்பிடும்போது தொலைக்காட்சி, தொலைப்பேசி போன்றவற்றை உபயோகிக்காமலும் பேசாமலும் உணவில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் இருக்கும்.

மேலும் பொறுமையாக மென்று உண்பது செரிமானத்திற்கு உதவும். இதுபோன்ற உளவியல் வழிகளை பின்பற்றி உடல் எடையைக் குறைக்கலாம். இதன்மூலம் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்.

– சங்கீதா, டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரி மாணவி.

Comments (0)
Add Comment