செய்தி :
அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் அணியினர் புகுந்து பல ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
அது தொடர்பாக காவல் நிலையத்திலும், உள்துறைச் செயலரிடமும் புகார் கொடுத்தோம்.
இவ்வளவு நாட்கள் ஆகியும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை!
– முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
கோவிந்து கேள்வி :
அ.தி.மு.க.பொதுக்குழு பற்றிய உயர்நீதிமன்றத் தீர்ப்பு இப்போதைக்கு ஈ.பி.எஸ்.ஸூக்குச் சாதகமாக வந்ததும் உங்களுக்கும் மிகச் சரியாக அ.தி.மு.க அலுவலகத் தாக்குதல் குறித்த வழக்கு நினைவுக்கு வந்து, காவல்துறை இன்னும் நடவடிக்கை எடுக்காதது பற்றிப் பேசியிருக்கீங்க..
அதே சமயம் உங்க தலைவிக்கு மிகவும் பிடித்த இடமான கோடநாட்டில் கொலையும், கொள்ளையும் நடந்து எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கு.
இன்னும் அந்த வழக்கில் தீவிரம் காட்டப்படலை.. அப்பப்போ புதிய தகவல் கிடைச்சிருச்சுன்னு சொல்ற காவல்துறை அது என்ன தகவல்ன்னு மட்டும் சொல்ல மாட்டேங்கிறாங்க..
அந்த வழக்கையும் விரைவுபடுத்திச் சீக்கிரம் நடவடிக்கை எடுத்து உண்மையான குற்றவாளிகளைப் பிடிங்கன்னு சொல்வீங்களா?