சைதாப்பேட்டை பெண்கள் மேநிலைப் பள்ளியில் மாணவியர் மத்தியில் பங்கேற்ற ஈரான் திரைப்பட நிகழ்வு பற்றிய பதிவை பேஸ்புக்கில் எழுதியிருக்கிறார் அ.மார்க்ஸ்.
சில்ட்ரன் ஆப் ஹெவன் படம் பற்றி மாணவிகள் கேட்ட கேள்விகள் வழியாக எதிர்காலத்தின் மீது நம்பிக்கை துளிர்த்ததாக அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 25 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த உலகப் புகழ்பெற்ற ஈரான் நாட்டுத் திரைப்படமான Children of the Heaven திரைப்படத்தை மாணவர்கள் மத்தியில் திரையிட வேண்டும் என்கிற மாநில அரசின் திட்டத்தின்படி நடந்த நிகழ்ச்சியில் படம் முடிந்த கையோடு மாணவியர் கேள்வி அரங்கம் நடந்தது.
நான் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் காலையில் படம் முடிந்தபின் மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தேன். அப்பள்ளி ஆசிரியைகளும் கலந்துகொண்டு சிறப்பாக பதிலளித்தனர்.
ஒரு மாணவி கேட்ட கேள்வி: “அது ஏன் படத்தில் மாணவிகளுக்குக் காலையிலும் மாணவர்களுக்கு மாலையிலும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன?”
“அது ஒரு முஸ்லிம் நாடு. ஆண்களுக்குத் தனியாகவும், பெண்களுக்குத் தனியாகவும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அவ்வளவுதான்” என அழகாகப் பதிலளித்தார் கலந்துரையாடலை நெறிப்படுத்திய ஆசிரியை.
படத்தில் வரும் அந்தப் பள்ளி மாணவியின் காலணி நீரில் அடித்துச் செல்லும்போது முஸ்லிம் ஒருவர் ஓடிச் சென்று அந்தச் சிறுமிக்கு உதவுவதை நானும் சுட்டிக்காட்டினேன். சுமார் அரைமணி நேரம் மாணவிகளின் கேள்விகள் தொடர்ந்தன.
அங்கே காலையில் திரையிடப்பட்ட அந்தப்படம் இங்கே தயாரிக்கப்பட்டது. அதிலும் குழந்தைகள் நன்றாக நடித்தனர்.
ஆனால் தேவையே இல்லாமல் படத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் ஒரு காதல் ஜோடி நடு நடுவே வந்து பழைய தமிழ் சினிமா பாடல்கள் பாடிச் சென்ற அபத்தம் கடுப்பேத்தியது.
அதை ஒரு மாணவி சுட்டிக் காட்டியதும் குறிப்பிடத்தக்கது.
மாலையில் அப்பள்ளியின் மேல் வகுப்பு மாணவிகளுக்கு அந்தப் படத்தின் ஒரிஜில் வடிவமான இயக்குநர் மஜித் மஜிடி இயக்கிய திரைப்படம் (Children of Heaven) திரையிடுவாதகக் கூறினார்கள்.
மாணவிகள் கேட்ட கேள்விகளை எல்லாம் கண்டபோது கொஞ்சம் நம்பிக்கை துளிர்த்தது.