ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. துபாயில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய வங்கதேசம் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.
அந்த அணி வீரர் ஆசிப் உசைன் அதிகபட்சமாக 39 ரன்கள் விளாசினார். மெகிடி ஹசன் 38 ரன்களும், மஹ்முதுல்லா 27 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்னே ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியில் குசல் மெண்டிஸ் 37 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார்.
நிசாங்கா 20 ரன்கள் அடித்தார். கேப்டன் தசுன் ஷனகா 45 ரன்கள் எடுத்தார். இதனால் இலங்கை அணி 19.2 ஓவர் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இதையடுத்து அந்த அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.