சேலம் 8 வழிச்சாலை: சர்ச்சையாகும் அமைச்சரின் பேச்சு!

செய்தி :

சேலம் எட்டுவழிச்சாலை அமைப்பது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கும். நாங்கள் இந்தத் திட்டத்திற்கு எதிரி கிடையாது!
– அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

கோவிந்து கேள்வி :

இதே எட்டு வழிச்சாலை பற்றி இப்போ தான் பேசினீங்க. அதுவே சர்ச்சை ஆயிடுச்சு. இப்போ திரும்பவும் குழப்பமாவே பேசுறீங்க, தமிழக அரசு முடிவு எடுக்கும்னு சொல்றீங்க. அதோடு இந்தத் திட்டத்திற்கு நாங்கள் எதிரி கிடையாதுன்னும் சொல்றீங்க..

இந்த விளக்கம் நீங்க முதலில் சொன்னதை விடக் குழப்பமா இருக்கே. எதிர்க்கட்சியா இருந்தப்போ இருந்த நிலைப்பாடு இப்போ காணாமப் போன மாதிரித் தெரியலையா?

*

Comments (0)
Add Comment