“நான் வாகனத்தை ஓட்டும்போது வேகம் காட்டாமல், நிதானமாகத் தான் செல்கிறேன். இருந்தும் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக் கொள்கிறேன். இதற்கு என்ன செய்யலாம் குருவே?’’
கேள்வியைக் கேட்டதும் சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு குரு சொன்னார்.
‘’நீ பயணிக்கும்போது உன்னைப் பற்றி மட்டுமே பார்க்கிறாய். உன் நிதானம் மட்டுமே உனக்குப் பாதுகாப்பைக் கொடுத்து விடாது. அப்படி இல்லாமல் உனக்கு எதிரே வருகிறவர்களையும் கவனமாகப் பார்.
பலர் மூடர்களைப் போலத் தறிகெட்டுக் குறுக்கே வரலாம். சிலர் அறிவாளிகளைப் போலக் குறுக்கே வராமலும் இருக்கலாம்.
இந்த இரண்டு அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஜாக்கிரதையுடன் நீ சாலையில் பயணித்தால் விபத்துக்களைத் தவிர்த்துவிடலாம்.
இது வாகனத்தை ஓட்டுவதற்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் பயணிப்பதற்கும் பொருந்தும்.’’
சீடரின் மனம் திருப்தியானது.
*