கையில் 140 ஏ.டி.எம். கார்டுகளுடன் கைது செய்யப்பட்ட வேலூர் திருடன்!

வேலூர் தெற்கு காவல் துறையின் குற்றப்பிரிவு காவலர்கள் வேலூர் கோட்டை சுற்றுச் சாலையில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் காவலர்களை பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு எதையோ தூக்கி வீசியுள்ளார்.

சந்தேகம் அடைந்த காவலர்கள் அவரை பிடித்து விசாரித்த போது அவர் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும், அவர் வீசியது ஏடிம் கார்டுகள் என்றும் தெரியவந்தது.

காவல் துறையினரின் விசாரணையில், கைதான நபர் பில்லாந்திப்பட்டு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பதும் இவர் ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க வரும் நபர்களை ஏமாற்றி போலியான மற்றும் காலாவதியான ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு நூதன முறையில் அவர்களை ஏமாற்றி அவர்களின் கார்டு மூலம் பணத்தை தொடர்ந்து திருடி வந்ததும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சுரேஷிடம் இருந்து 19 வகையான வங்கிகளின் 140 ஏடிஎம் கார்டுகள், 35 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Comments (0)
Add Comment