அருமை நிழல்:
1968-ம் ஆண்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தியின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. அப்பொழுது வந்து வாழ்த்தியவர்கள் பட்டியலில் பெருந்தலைவர் காமராஜரும் இருந்தார். அறிஞர் அண்ணாவும் இருந்தார். பக்தவச்சலம், கலைஞர் கருணாநிதியும் இருந்தார்கள். கட்சி வேறுபாடுகள் கடந்து பலரை ஒருங்கிணைந்தது சிவாஜி வீட்டுத் திருமணம்.