இந்தியன் 2: விவேக் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், கமலஹாசனுடன் மட்டும் நடிக்காமல் இருந்தார்.

ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது பல காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன.

முதன்முறையாக கமல்ஹாசனுடன் நடிப்பதைப் பற்றி மகிழ்ச்சியையும் விவேக் வெளிப்படுத்தினார் விவேக்.

ஆனால், சில காரணங்களால் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனிடையே நடிகர் விவேக் திடீரென காலமானார்.

இதனால் அவரின் கதாபாத்திரம் மாற்றப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகச் சொல்லப்பட்டது.

விவேக்கின் காட்சிகளை நீக்கிவிட்டு, வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்கப் போகிறார்கள் என்றும் பேசப்பட்டது.

இப்போது ஜோக்கர் படத்தின் நாயகன் குரு சோமசுந்தரத்தை இந்தியன் 2 படத்தில் நடிக்க வைக்கவுள்ளனர்.

Comments (0)
Add Comment