அருமையான நிஜமும் அழகான நகலும்!

அருமை நிழல்: 
*
நாதஸ்வரம் என்றால் “நலந்தானா” என இசையால் விசாரித்த ‘தில்லானா மோகனம்பாளை‘ மறக்க முடியுமா? படத்தை நாதஸ்வரத்தால் உயர்த்தியவர்கள் மதுரை சேதுராமன் – பொன்னுசாமி இசைச் சகோதரர்கள்.

இவர்களை வீட்டிற்கு வரவழைத்து அவர்களுடைய உடல்மொழியை, விரலின் நளினமான வித்தைகளை நுணுக்கமாகக் கிரகித்து படத்தில் அசலான நாதஸ்வரக் கலைஞரைப் போல வாழ்ந்திருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி. கூடவே அசத்தியிருப்பார் ஏ.வி.எம்.ராஜன்.

“படத்தில் நீங்க நாதஸ்வரத்தை வாசிக்கிற மாதிரி நடிச்சதைப் பார்த்தா நீங்க தான் ஒரிஜனலா வாசிச்ச மாதிரி இருந்தது” என்று சிக்கல் சண்முகசுந்தரமாக நடித்த சிவாஜியை மனதாரப் பாராட்டியிருக்கிறார்கள் அசலாக வாசித்த இரு சகோதரர்களும். இதைவிட நடிப்புக் கலைஞருக்கு வேறென்ன வேண்டும்?

Comments (0)
Add Comment