அரவிந்த் சாமியுடன் நடித்ததில் பெருமை அடைகிறேன்!

மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் பெருமிதம்

மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் ‘ரெண்டகம்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிப்படமாக வெளியாக உள்ளது. மலையாளத்தில் ‘ஒட்டு’ என்ற பெயரில் வெளியாகிறது.

இந்த படத்தில் அரவிந்த் சாமி, ஈஷா ரெப்பா, ஜாக்கி ஷெராப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பெலினி டிபி இயக்கியுள்ள இந்த படத்தை நடிகர் ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ‘தி ஷோ பீப்பிள்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த திரைப்படத்தை கேரளா, கோவா, மங்களூர், மும்பை மற்றும் புனே ஆகிய இடங்களில் படமாக்கியுள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 2-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, “ஒட்டு த்ரில்லர் படத்தில் அரவிந்த்சாமியுடன் நடித்ததில் பெருமை அடைகிறேன்” என குஞ்சாக்கோ போபன் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment