அன்பு தான் அவர்களுக்கு நிரந்தர மருந்து!

செங்கல்பட்டில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திர தினவிழா நிகழ்வை வழக்கறிஞர் பிரபாகரன் அவர்கள் ஒருங்கிணைத்தார்.

உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர்கள், அவர்களை தொட்டு அரவணைத்துப் பேசினால் நோய் வந்துவிடுமென்பதற்காக யாரும் அவர்களை காணுவதற்கு கூட செல்ல மாட்டார்கள்.

ஆனால், திணைநிலவாசிகள் கடந்த 3 வருடமாக தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.

இந்த முறை “பாட்டிகளும் பழமொழிகளும்” என்ற தலைப்பில் நாடகம் நிகழ்த்தினர். நாடகத்தைப் பார்த்த சுமார் 100க்கும் மேற்பட்ட முதியவர்கள் வாய்விட்டு சிரித்து மகிழ்ந்தனர்.

Comments (0)
Add Comment