அவசர கால கடனுதவிக்காக மேலும் ரூ.50,000 கோடி ஒதுக்கீடு!

கொரோனா பெருந்தொற்றினால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிறு, குறு தொழில்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசால் அவசர கால கடனுதவி திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் வரம்பை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வசதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், “கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, விருந்தோம்பல் மற்றும் அது சார்ந்த துறைகள் பாதிக்கப்பட்டதால், அந்தத் துறைக்கு கடனுதவி வரம்பு அதிகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

அவசர கால கடனுதவி திட்டம்  31.3.2023 வரை செல்லுபடியாகும். இத்திட்டத்தின் கீழ் 5.08.2022 வரை 3.67 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

Comments (0)
Add Comment