தமிழக அரசியலுக்கு ரஜினி அவசியமா?

பரண் :

– சுப்பிரமணியன் சுவாமியின் அன்றைய பதில்
*
கேள்வி : அறிக்கை விடுவதில் பெயர் வாங்கியவர் நீங்கள். நீங்கள் விட்ட முதல் அறிக்கை எது? நினைவிருக்கிறதா?

சுப்பிரமணியன் சுவாமி பதில் : என்னுடைய 27 -வது வயதில் 1967-ல் அமெரிக்காவில் நான் பேராசிரியராகப் பணியில் இருந்தபோது, நாட்டின் பாதுகாப்புக்காக அணுகுண்டு வெடித்தால், எந்தவிதமான பொருளாதார இழப்பும் நேரிடாது என்று அறிக்கை விட்டிருந்தேன். அது தான் என்னுடைய முதல் பொது அறிக்கை.

கேள்வி : ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்து, ஜெயலலிதா சார்பில் ரஜினியிடம் கூட்டணிக்காகத் தூது செல்லும் சூழ்நிலை வந்தால், செல்வீர்களா?

சுவாமி : தமிழக அரசியலில் ரஜினியின் அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை.

கேள்வி : நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், ஜெயலலிதா நல்லவரா?

சுவாமி : நெஞ்சைத் தொட்டுச் சொல்கிறேன். ஜெயலலிதா நல்லவர், அதுவும் கருணாநிதியை விடக் கோடி மடங்கு நல்லவர்”

*****

– 1999 ஆம் ஆண்டு ஜனவரி 3 – அன்று ‘ஜூனியர் விகடன்’ வார இதழில் வெளிவந்த ‘மக்கள் பேட்டி’ பகுதியில் ஜனதாக் கட்சித் தலைவரான சுப்பிரமணியன் சுவாமியிடம் கேட்கப்பட்ட சில கேள்விகள் – பதில்கள்.

Comments (0)
Add Comment