கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் இந்தியா!

இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு சீன உளவுக் கப்பல் வந்துள்ளது. இலங்கையில் அம்மன்தோட்டா துறைமுகத்தில் அக்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பல் ஒரு வாரத்திற்கு அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு மிகவும் அருகே தமிழக கடற்கரையோரம் கூடங்குளம் அனுமின் நிலையம், ராமேசுவரம் தீவு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் உள்ளன.

இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ள சீன உளவுக் கப்பல் மூலம் 150 கிலோ மீட்டா் வரையில் துல்லியமாகக் கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இதனைத் தடுக்கும் வகையில் ராமேசுவரத்தில் பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்திய கடற்படை கப்பல் மற்றும் ஹெலிகாப்டா்கள், கடலோரக் காவல்படையின் ஹோவா் கிராப்ட் கப்பல் ஆகியவை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Comments (0)
Add Comment