துணைக் குடியரசுத் தலைவராக பதவியேற்றார் ஜக்தீப் தங்கர்!

வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து கடந்த 6-ம் தேதி துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தது.

அதில், பா.ஜ.க, தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் களமிறங்கிய ஜக்தீப் தங்கர் வெற்றி பெற்றார்.

அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், இந்தியாவின் 14-வது துணைக் குடியரசுத் தலைவராக ஜக்தீப் தங்கர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில், பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க, தலைவர் நட்டா, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment