சுதந்திரம் – 75: சொர்ணம்மாள் செய்த தியாகம்!

-மணா

இந்தியா விடுதலையடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடக்கின்றன.

இந்தச் சமயத்தில் இந்த நாட்டு விடுதலைக்காக உண்மையாகவே பாடுபட்டவர்களையும் இந்தத் தருணத்தில் நினைவுகூர வேண்டியதிருக்கிறது.
இந்திய சுதந்திரத்தில் தமிழகத்தின் பங்கும் எந்த விதத்திலும் குறைந்தது அல்ல.

அவ்வளவு தூரத்திற்குப் போராடியவர்கள் நம் மண்ணில் நமக்கு முன்னால் இன்னும் இருக்கிறார்கள். பலர் மறைந்திருக்கிறார்கள்.

எந்தக் காரியத்தைச் செய்தாலும், அதில் தங்களுக்கு என்ன லாபம் கிடைக்கும் என்கிற உணர்வு அன்றைக்குச் சுதந்திரத்திற்குப் போராடியவர்களுக்கு இல்லை.

அவரவர் மனதில் இருந்த அக்னிக் குஞ்சைப் போன்ற வேகம் மட்டுமே அவர்களை வழிநடத்தியிருக்கிறது. போராட வைத்திருக்கிறது. சிறைப்பட வைத்திருக்கிறது. பல துயரங்களைச் சந்திக்க வைத்திருக்கிறது.

அப்படிப்பட்ட துயரங்களைச் சந்தித்தவர்களில் ஒருவர் தான் தமிழகத்தைச் சேர்ந்த சொர்ணம்மாள்.

மதுரையில் அவருடைய இறுதிக்காலத்தில் மிக எளிய வீட்டில் அவரைச் சந்தித்த போது, அவருடைய கடந்த காலம் குறித்து எந்த விதமான பெருமிதங்களும் அவரிடம் கொஞ்சமும் இல்லை.

அந்தப் பதிவு மீண்டும் உங்கள் பார்வைக்கு.

சொர்ணம்மாள் செய்த தியாகம்!

பிரபலங்களையே பொதுவாக நாம் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். சாதாரண மக்கள் அதைவிட பிரமிக்கத்தக்க அளவில் செயல்களைச் செய்துவிட்டு மிகச் சாதாரணமாக இருக்கிறார்கள்.

சாகசங்களையும், கதைகளையும் வெளிநாட்டு டிவிடிக்களில் தேடுகிற திரைத்துறை, காட்சி ஊடகம் சார்ந்தவர்களில் பலர் நம் மண்ணில் அபூர்வச் செடியைப் போல முளைத்த அவர்களை உரிய முறையில் கண்டுகொள்வதில்லை என்பது உறுத்தக்கூடிய நிஜம்.

பதினேழு ஆண்டுகளுக்கு முன் மதுரையில் நான் வார இதழ் ஒன்றுக்காகச் சந்தித்த சொர்ணம்மாளின் வாழ்க்கை சிலிர்ப்பூட்டக்கூடியது. புறநகரில் ஓர் ஓடு வேய்ந்த எளிய வீட்டில் அவரைச் சந்தித்தபோது அவருக்கு எண்பத்தியொரு வயது.

தியாகம் என்கிற வார்த்தை கூட இவரைப் பொறுத்தவரை கனமானது. ‘அப்பிராணி’யான முகத்துடன் மெல்லிய குரலில் பேசினார் சொர்ணம்மாள்.

1942 ஆகஸ்ட் மாதம். மதுரை ஜான்சிராணி திடலில் ‘வெள்ளையனே வெளியேறு’ கிளர்ச்சி கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த நேரம். வைத்தியநாதய்யரைப் போன்றவர்கள் மேடையில் ஆவேசமாகப் பேசுகிறார்கள்.

கூடியிருந்த கூட்டம் கொந்தளிக்கிறது. பிரிட்டிஷ் போலீஸ் கட்டுப்படுத்துகிறார்கள். மீறி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தும்போது குண்டு பாய்ந்து உயிரிழந்தவர்கள் ஆறு மாணவர்கள். அவர்களுடைய உடல்களை ஒரு கைவண்டியில் கிடத்தி மற்றவர்களுக்கு பீதியூட்ட போலீஸார் நகரில் இழுத்து வருகிறார்கள்.

பார்த்த இளைஞர்களிடம் பதைபதைப்பு பரவுகிறது. இப்படியொரு பதட்டமான சூழலில்தான் மதுரை விளக்குத்தூண் அருகே நடந்திருக்கிறது இன்னொரு பயங்கரம். அந்நியத் துணிகளைப் புறக்கணித்து அவற்றை எதிர்த்து அங்கு போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

பல பெண்கள் கலந்து கொண்டு கோஷம் போட்டபடி துணிகளை எரித்துக் கொண்டிருந்தார்கள். அதற்குத் தலைமை தாங்கியவர்கள் லட்சுமிபாயும், சொர்ணமும். அப்போது சொர்ணத்துக்கு வயது இருபத்தி ஆறு.

முரட்டுக் கதரில் உடையணிந்து சாலையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த அவர்களைக் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றியிருக்கிறார்கள். போலீஸ் ஸ்டேஷனில் அவர்களைப் பிடித்து மிரட்டியவர் போலீஸ் அதிகாரியான விஸ்வநாதன் நாயர்.

(அவருக்கு தீச்சட்டி கோவிந்தன் என்கிற இன்னொரு பெயரும் உண்டு.) வேறு துணிகளை அணிந்து கொள்ளச் சொல்லியிருக்கிறார், மறுத்திருக்கிறார்கள் அந்த இரண்டு பெண்களும்.

உடனே போலீஸாரிடம் ரகசிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறார் விசுவநாதன் நாயர். மிரட்டி மறுபடியும் வேனில் அவர்களை ஏற்றியிருக்கிறார்கள். கூடவே ஐந்து போலீஸ்காரர்கள். நேராக வேன் அப்போது காடாக இருந்த புதூர் பகுதிக்குச் சென்றிருக்கிறது.

“இறங்குங்கடி…’

கீழே இரண்டு பெண்களையும் இறங்க வைத்திருக்கிறார்கள். இருள் கூடிவிட்டது. சுற்றிலும் அங்கங்கே புதர்கள். பக்கத்தில் வந்த போலீஸார் சட்டென்று அந்த இரண்டு பெண்கள் அணிந்திருந்த துணிகளை அவர்களுடைய கத்தலையும் மீறி உருவியிருக்கிறார்கள்.

உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் கைகளால் மறைத்தபடி அழுதபடி நின்றிருக்கிறார்கள் இரு பெண்களும்.

“போராட்டம் நடத்துனீங்கள்லே.. அப்படியே போங்கடி.. சுயராஜ்யம் தெரியும்.”

நிர்வாணமான நிழல்களாக நின்ற அவர்களைப் புதருக்குள் விரட்டியிருக்கிறார்கள்.

சுற்றிலும் யாருமில்லாத நிலையில் இறங்கிய பெண்கள் கூசிப் போய் அங்கிருந்த புதர்களுக்கிடையில் மறைந்து இருந்திருக்கிறார்கள் விடியற்காலை வரை.

காலையில் அந்தப் பக்கம் வந்தவர்களிடம் தூரத்தில் இருந்தபடி சொல்லி மாற்றுத் துணிகளை வாங்கி அணிந்து கொண்டு வெளியே வந்து விஷயத்தைச் சொன்னதும் மதுரையில் உள்ள இளந்தாரிகளிடம் ஒரே கொந்தளிப்பு.

“நம்ம பொண்ணுகளை இப்படிக் கேவலப்படுத்திட்டாங்களேன்னு கேள்விப்பட்டதும் அப்போது இளைஞர்களாக இருந்த நாங்க பதினாறு பேர் ஒண்ணு சேர்ந்தோம்.

நம்ம பொண்ணுகளை அசிங்கப்படுத்தின போலீஸ் அதிகாரியான விஸ்வநாதன் நாயர் உள்ளிட்டோரைப் பழிக்குப் பழி வாங்க திட்டம் போட்டோம்.

தினமும் காலையில் மீனாட்சியம்மன் கோவிலுக்கு தவறாமல் வருவார் நாயர். அவரைப் பின்தொடர்ந்து ஒருநாள் நாங்க கையில் ஆஸிட் பாட்டில், வெடிகுண்டுடன் காத்திருந்தோம்.

சரியாக, விஸ்வநாதன் நாயர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெளியே வந்தப்போ ஆஸிட்டை வீசினோம். வெடிகுண்டை வீசினோம்.

அப்படியும் அந்த அதிகாரி தப்பிச்சுட்டாரு. போலீஸ் தீவிரமாத் தேடினாங்க. எப்படியோ ஒரு சி.ஐ.டி எங்களைப் பிடிச்சுட்டாரு. வழக்குப் போட்டாங்க.

சிறையில் பல ஆண்டுகள் இருந்தோம். இன்றைய இளைஞர்களுக்கு இந்த அளவுக்குப் போராடியிருக்காங்கங்கிற வரலாறாவது சரிவரத் தெரியுமா? என்று இந்தச் சம்பவம் நடந்து ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்டு என்னிடம் விவரித்தார்கள் அதில் கைதானவர்களான லட்சுமணனும், சுவாமிநாதனும்.

மதுரையைச் சேர்ந்த தியாகியான மாயாண்டி பாரதி இந்த வழக்கில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர். “இன்னைக்கு இருக்கிற பல பேருக்கு இது சாதாரணமாகத் தோணலாம்.

ஆனா அப்போ பெண்கள் முதற்கொண்டு எப்படிப் போராடியிருக்காங்கங்கிறது மிக முக்கியம். என்ன கொடுமைங்க அது… போராடினவங்களோட உடைகளை அப்புறப்படுத்தி நடுத்தெருவில் அலையவிடுறஇடத்தில் சின்னக் கோவில், சுற்றிலும் திரிசூலங்கள். துருப்பிடித்த நீண்ட அரிவாள்கள்.

மேற்கூரையில்லாமல் காற்றோட்டமாக இருக்கிற கோவிலில் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று திருவிழா நடக்கிறது. அப்போது தவறாமல் கட்டபொம்மன் நாடகம் நடக்கிறது.

அடைக்கலம் என்று தங்கள் பகுதிக்கு வந்தவர்களை அரசியல் நோக்கத்தில் ஆளுகிறவர்கள் காட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் சாதாரணமான மக்கள் (விதிவிலக்கான ஒரு சிலரைத்தவிர)

காட்டிக் கொடுக்கத்துணிவதில்லை. அதோடு அவர்கள் தங்கிய இடத்தை இரு நூற்றாண்டுகள் கழிந்தும் பராமரிக்கிறார்கள். சாதி மத பேதம் பாராட்டாமல் வந்தவர்களை சாமிகளாகக் கும்பிடுகிறார்கள்.

ஆட்சியாளர்களை விட எவ்வளவு உயர்ந்த மேன்மையுடன் இருக்கிறார்கள் எளிய மக்கள்!

Comments (0)
Add Comment