செய்தி :
ஆன் லைன் ரம்மி விளையாட்டில் 5 லட்சம் இழந்த பட்டதாரி தற்கொலை : கூடுதலாக இழந்த இன்னொருவர் மாயம்!
கோவிந்து கேள்வி :
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டுப் பலர் தற்கொலை செஞ்சிக்குறாங்கன்னு தான் போன ஆட்சியிலேயே அதைத் தடை செய்யணும்னு முயற்சி பண்ணினாங்க.. ஆளுநர் கவனத்துக்கும் அதைக் கொண்டு போனாங்க.. இப்போ போன ஆண்டில் மட்டும் ஆன் லைன் ரம்மி விளையாட்டால் 25 பேர் வரை உசிரை விட்டிருக்காங்க..
தி.மு.க ஆட்சியிலும் அதைத் தடை பண்ணனும்னு முடிவு எடுத்து ஆய்வுக்குழு ஒன்றை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலே நியமிச்சாங்க.. அவங்களும் ஆய்வு பண்ணி அறிக்கையை அரசு கிட்டே கொடுத்தாச்சு.. அப்புறம் இன்னமும் முடிவெடுக்காம ஏன் அரசு தாமதம் காட்டுது? மறுபடியும் ஆன்லைன் ரம்மினாலே தற்கொலைகள் நடந்துகிட்டிருக்கு…
சமூகவலைத் தளங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஊக்கப்படுத்துற விளம்பரங்கள் வந்துகிட்டே இருக்கு..
அரசு எப்போ தாங்க முழிச்சுக்கிட்டு உரிய நடவடிக்கை எடுத்து ஆன் லைன் ரம்மியைத் தடை பண்ணும்?