அடிவானத்துக்கு அப்பால்…!

நம்பிக்கையையும், மனதில் உத்வேகத்தையும் வாசிக்கும் போதெல்லாம் ஏற்படுத்தும் பசுவய்யாவின் (சுந்தர ராமசாமி) ஒரு கவிதை:

நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை
துடைகள் பிணைத்துக் கட்ட
கயிறுண்டு உன் கையில்.

வாளுண்டு என் கையில்
வானமற்ற வெளியில் நின்று
மின்னலை விழுங்கிச் சூலுறும்
மனவலியுண்டு.

ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின் வாங்கல் அல்ல பதுங்கல்.

எனது வீணையின் மீட்டலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் காலங்கள்.

எனது கொடி பறக்கிறது
அடிவானத்துக்கு அப்பால்.

நன்றி: பசுவய்யா கவிதைகள், காலச்சுவடு பதிப்பகம்.

Comments (0)
Add Comment