கேரளத்தில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. திரிச்சூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
மாவட்டத்திலுள்ள திறந்து விடப்பட்டுள்ளதால், சாலக்குடி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்நிலையில், வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று ஆற்றின் குறுக்கே வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. ஆற்றின் நடுவே உள்ள சிறிய மேடான பகுதியில், மரங்களையொட்டி பலமணி நேரம் யானை நின்றது.
பின்னர் தண்ணீரில் வேகம் குறைவாகவுள்ள பகுதியை நோக்கிச் செல்ல முயன்ற யானை, அங்குமிங்கும் வெள்ளத்தில் திணறியது.
அதிரப்பள்ளிக்கு வந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள், அதிகப்படியான வெள்ளத்தால் யானையை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், சிலமணி நேரத்திற்கு பிறகு, வெள்ளப் பெருக்கு குறைவாகவுள்ள காட்டுப் பகுதியையொட்டிய கரைக்கு யானை சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.