கேஜிஎஃப் 2, சார்லி 777 வரிசையில் விக்ராந்த் ரோணா.
இந்த 2022-ல் இந்திய அளவில் சொல்லி அடித்த கன்னடப் படங்கள் என்று சமூக வலைதளத்தில் எழுதியிருக்கிறார் சினிமா பத்திரிகையாளர் சங்கர்.
“நான்கு நாட்களில் ரூ 100 கோடி வசூலைத் தாண்டி, அனைத்திந்திய வெற்றிப் பட வரிசையில் 3 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது சுதீப்பின் விக்ராந்த் ரோணா.
வடக்கிலோ இந்திப் படங்கள் மொத்தமாக ரூ 15 கோடியைக் கூட தாண்ட முடியாமல் தத்தளிக்கின்றன.
ஊடகர்களுக்கான காட்சியில் இந்தப் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது படுமட்டமாகக் கமெண்ட் அடித்துக் கொண்டிருந்த பலரும், ‘செம படம்… பிரமாதம்’ என விமர்சனம் எழுதியிருப்பதைப் பார்க்க, படிக்க முடிகிறது.
நம்மைப் பொறுத்தவரை அத்தனை திருப்தியான படம் இல்லை. படம் முழுக்க பிடிவாதமாக இருட்டிலேயே இருக்கும்படி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாயகன் ரோனாவே அறிமுகமாகிற காட்சியிலிருந்து கடைசிவரை டார்ச் லைட்டோடுதான் சுற்றிவருகிறார். அப்படி ஓர் இருட்டு, குழப்ப திரைக்கதை.
இவற்றையெல்லாம் ரா ரா ராக்கம்மா பாட்டு, அந்த நீளமான கடைசி சண்டைக் காட்சிகளை வைத்து சரிகட்ட முயற்சித்திருக்கிறார்கள்.
இந்திய சினிமா ரசிகர்கள் ஏதோ ஒரு வெறியில் இருக்கிறார்கள் போலிருக்கிறது” என்று எழுதியுள்ளார் சங்கர்.