சீனா, விண்வெளியில் சொந்தமாக ஆய்வு நிலையத்தை அமைத்து வருகிறது. சமீபத்தில் விண்வெளி நிலையத்துக்கு தேவையான பொருட்களை லாங் மார்ச் 5பி ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது.
23 டன் எடை மற்றும் 176 உயரம் கொண்ட இந்த ராக்கெட், செயற்கை கோளை நிலை நிறுத்திவிட்டது.
இந்த நிலையில் சீன ராக்கெட் பாகங்கள் இந்திய-பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. தென்கிழக்கு ஆசியாவில் பூமியின் வளிமண்டலத்தின் வழியாக கடும் வேகத்தில் வந்த ராக்கெட் பாகங்கள் கடலில் விழுந்தது.
இதனை அமெரிக்க ராணுவம் உறுதிபடுத்தியது. அதேவேளையில் சீனா எந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தது.
ராக்கெட் பாகங்கள் வானில் சீறிப் பாய்ந்து செல்லும் போது அதனை மலேசியாவில் மக்கள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.