காமன்வெல்த்: பளு தூக்கும் போட்டியில் இந்தியா சாதனை!

காமன்வெல்த் போட்டி, பளு தூக்குதலில் இந்தியாவுக்கு 3-வது தங்கம் கிடைத்துள்ளது.
காமன்வெல்த் போட்டியின் பளு தூக்குதலில் இந்தியாவின் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றார்.

ஆண்களுக்கான 73 கிலோ எடைப்பிரிவில் 313 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் அச்சிந்தா ஷூலி முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.

ஏற்கனவே மீராபாய் சானு, ஜெரேமி தங்கம் வென்றுள்ள நிலையில், பளு தூக்குதலில் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றுள்ளது.

இதேபோல், ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நியூசிலாந்தின் கேட்லின் வாட்ஸை எதிர்கொண்டார்.

இந்தப் போட்டியில் ஜோஷ்னா சின்னப்பா 11-8, 9-11, 11-4, 11-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Comments (0)
Add Comment