தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சினேகா. அவரது தந்தை ராஜாராமுக்கு 70வது பிறந்தநாள்.
எதிர்பாராதவிதமாக அவருக்கு சர்ப்ரைஸ் தரவேண்டும் என விரும்பினார் அன்பு மகள்.
சென்னை ரெட்ஹில்ஸில் உள்ள ஷெல்ட்டர் ஹோமுக்கு தனது தந்தையை அழைத்துச் சென்ற சினேகா, அங்கிருந்த சிறப்பு குழந்தைகளுடன் சேர்ந்து தந்தையின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இதை எதிர்பாராத சினேகாவின் தந்தை ராஜாராம் மகிழ்ச்சியடைந்தார்.
அந்த இல்லத்தில் இருந்த குழந்தைகளின் வாழ்த்துக்களுடன் கேக்கை வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் சினேகாவின் தந்தை ராஜாராம்.
அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களுக்கு மதியம் சுவையான பிரியாணி விருந்தளித்தும் அவர்களை மகிழ்வித்துள்ளனர்.
தாத்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிநேகாவின் மகன் விஹானும் மகள் ஆத்யந்தாவும்கூட கலந்துகொண்டனர்.
இவர்கள் இருவரும் அங்கிருந்த குழந்தைகளுக்கு தங்களது கைகளால் உணவு பரிமாறியதுடன், பரிசாக புத்தகங்களும் வழங்கியது பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.