இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் போட்டிகள் நேற்று முன் தினம் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், குருப் ஏ பிரிவில் இந்தியா, கானா அணிகள் இடம்பிடித்துள்ளன.
நேற்று நடந்த மகளிருக்கான ஹாக்கிப் போட்டியில் இந்தியா, கானா அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் கானா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் குர்ஜித் கெளர், நேகா, சங்கீதா குமாரி, சலிமா டேடே ஆகியோர் கோல்களை அடித்தனர்.