குஜராத் மாநிலம், சுரேந்திர நகர் மாவட்டத்தில் உள்ள கஜன்வாவ் கிராமத்தில் 12 வயது சிறுமி மணிஷாவின் பெற்றோர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். இவர்ளுடன் மணிஷாவும் உடன் சென்றிருக்கிறார்.
வயலில் விளையாடிக் கொண்டிருந்த மணிஷா அருகிலிருந்த சுமார் 600 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராத விதமாக விழுந்துள்ளார்.
உடனே இதுகுறித்து ராணுவ வீரர்கள் மற்றும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் 60 ஆழத்தில் சிக்கிய சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அருகிலேயே மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.
சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பின் சிறுமி ஆழ்துளைக் கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அந்த சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.