முதியவர்களுக்கு ரயிலில் மீண்டும் சலுகை?

செய்தி :

70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ரயிலில் மீண்டும் சலுகைகள் வழங்க அரசு பரிசீலனை!

கோவிந்து கேள்வி :

முன்பு 60 வயதுக்கு மேலே இருக்கிறவங்களுக்குச் சலுகை கொடுத்தாங்க.. பிறகு அதையும் நிறுத்திட்டாங்க.. இப்போ 70 வயசுக்கு மேலே இருக்கிறவங்களுக்கு மீண்டும் சலுகை வழங்கலாமான்னு யோசிக்கிறாங்க..

அப்படி யோசிக்கிறவங்க பல பேரு அறுபது வயசைக் கடந்தவங்களாத் தானே இருக்காங்க.. ஓட்டுக்கேட்க வர்றப்போ யாரும் இந்தச் சலுகையை எல்லாம் நிறுத்தப் போறோம்னு சொன்னீங்களா?”

Comments (0)
Add Comment