முதியோருக்குச் சலுகை ரத்து ஏன்?

குடிமக்களுக்கு மட்டும் சலுகை அளிக்கப்பட்டதில்லை. ரெயில்வேயில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் இலவச பாஸ், கட்டண சலுகை, இந்நாள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலவச பாஸ் என்று ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது.

அப்படி இருக்க, மூத்த குடிமக்களை மட்டும் குறிவைத்து ரத்து செய்ததை மறுபரிசீலனை செய்யவேண்டும். ஒருமுறை கொடுத்து வந்த சலுகையை திடீரென நிறுத்துவது என்பது நிச்சயமாக ஏற்புடையது அல்ல.

இது, தட்டில் சாப்பாடு போட்டு கொடுத்து, சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது தட்டை பறிப்பதற்கு இணையாகும். மேலும், 60 வயது வரை இந்த மூத்த குடிமக்களெல்லாம் ரெயிலில் டிக்கெட் எடுத்துத்தான் பயணம் செய்து இருப்பார்கள்.

அவர்களால் ரெயில்வே துறைக்கு வருமானம் கிடைத்திருக்கும். இப்போது அவர்களுக்கு கட்டண சலுகை கொடுப்பதை இழப்பாக கருதக்கூடாது.

– நன்றி தினத்தந்தி தலையங்கத்தின் ஒரு பகுதி

Comments (0)
Add Comment