மாணவிகள் வாழ்வில் ஏற்றம் தரும் கல்லூரி!

டாக்டர். எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரியில் பயில்வோம்!

சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வரும் டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நடப்புக் கல்வியாண்டு மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.

இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவிகள் ஆன்லைனிலேயே விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தக் கல்லூரியில் தற்போது 14 வெவ்வேறு பாடப் பிரிவுகளில் இளநிலை பட்டப் படிப்புகளும், 5 பிரிவுகளில் முதுநிலை பட்டப் படிப்புகளும், 5-ஆண்டு ஒருங்கிணைந்த 1 பட்ட மேற்படிப்பும் தற்போது கற்றுத் தரப்படுகின்றன.

இக்கல்லூரி வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியின்படி, தற்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி,

நடப்புக் கல்வியாண்டில் கல்வி பயில விரும்பும் மாணவிகள், ஆன்லைன் மூலமாகவே அதற்கான விண்ணப்பங்களைப் பெற்று, விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களைப் பெற www.mgrjanaki.ac.in என்ற இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி கல்லூரியில் தற்போது இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளில் சுமார் 4000 மாணவிகள் கல்வி கற்று வருகிறார்கள்.

பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் மட்டுமின்றி, மாணவியரின் பிற திறமைகள் மற்றும் ஆர்வங்களுக்கும் இடமளித்து அவற்றை மேம்படுத்துவதில், இந்தக் கல்லூரி அதிக கவனம் செலுத்தி வருகிறது.

மேலும், இக்கல்லூரியில் பயிலும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மாணவிகளுக்கும், அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவிகளுக்கும் கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

இதுதவிர, ஆண்டுதோறும் தகுதியான 200 மாணவிகளைத் தேர்ந்தெடுத்து, சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக, வளாக நேர்காணலில் (Campus interview) பங்கேற்கும் 100% மாணவிகளுக்கும், பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெற்றுத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கல்லூரியில் தினமும் காலை 8.15 முதல் மதியம் 1.10 மணி வரை மற்றும் மதியம் 1.10-க்கு தொடங்கி மாலை 5.40 வரை என இரண்டு ஷிப்ட்களாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பாடத் திட்டங்களைப் பொறுத்தவரை,

பி.காம் (B.Com) பட்டப் படிப்பில் பொது (General), கணக்கியல் மற்றும் நிதி (Accounting & Finance), நிறுவன நிர்வாகப் பணியியல் (Corporate Secretaryship) மற்றும் வங்கி மேலாண்மை (Bank Management) என 4 பிரிவுகளும்,

கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் (Bachelor of Computer Applications) இளநிலைப் பட்டப்படிப்பும், பி.பி.ஏ. (BBA) எனும் வணிக நிர்வாகத்தில் ஒரு இளநிலை பட்டமும், இளமறிவியல் பாடத்தில் மனோதத்துவம் (B.Sc. – Psychology),

பயோகெமிஸ்ட்ரி (Biochemistry), மைக்ரோ பயாலாஜி (Microbiology), கணிதம் (Mathematics), கணினி அறிவியல் (Computer Science) மற்றும் விஷுவல் கம்யூனிக்கேஷன் (Visual Communication) என 6 பிரிவுகளும்,

இளங்கலைப் பிரிவில் ஆங்கிலம் (English), தமிழ் (Tamil), நாட்டியம் (Natya) என 3 பிரிவுகளும்,

முதுநிலை அறிவியல் பாடத்தில் பயோ இன்பர்மேட்டிக்ஸ் & கிளினிக்கல் டிரையல் மேனேஜ்மெண்ட் (M.Sc – Bioinformatics & Clinical Trial Management),

அப்ளைட் மைக்ரோ பயாலஜி (Applied Microbiology), இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (Information Technology) போன்ற பிரிவுகளும்,

முதுகலையில் மனிதவள மேம்பாடு மற்றும் நிர்வாகம் (M.A. Human Resource Management), ஆங்கிலம் என 2 பிரிவுகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும் விவரங்களுக்கு,

Phone
(044) 2493 7382

Address 

Dr. MGR Janaki College of Arts and Science for Women
“Sathyabama MGR Maligai”,
11 & 13, Durgabai Deshmuk Road,
Chennai, Tamilnadu,
India – 600028.

E-Mail
admin@mgrjanaki.ac.in

visit us at http://www.mgrjanaki.ac.in

Comments (0)
Add Comment